வெளியுறவுத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சக்திமிக்க வெளியுறவுக் கொள்கையொன்றை கடைப்பிடிக்க எதிர்பார்ப்பதாக புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
அமைச்சில் இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
இந்தப் பதவியை மிகவும் பொறுப்புடன் ஏற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.