ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சிலர், கிளிநொச்சியில் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டு வரும் காணாமல் போனோரின் உறவினர்களை இன்று சந்தித்துள்ளனர்.
கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்னால் கடந்த 179 நாட்களாக, காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொள்வதற்காக ஜெனீவாவில் இருந்து வருகைத்தந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகளும், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதிகளும் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.
அவர்களின் பிரச்சினை குறித்து உடனடியாக அவதானம் செலுத்துவதாக உறுதியளித்துள்ள பிரதிநிதிகள், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட மறுத்துள்ளனர்.