ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
பார்ஸிலோனாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 13 பேர் பலியானதுடன், 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில், குறித்த தாக்குதலை இலங்கை அரசாங்கம் கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதாகவும், அவர் தமது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.