விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை -தோற்கடிக்க நடவடிக்கை – நிஷாந்த முத்துஹெட்டிகம

316 0

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த பிரேரணையை கொண்டு வர ஐக்கிய தேசிய கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடம் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment