புதிதாக பிறந்த குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பாகிஸ்;தான் மருத்துவமனை பணியாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தைகளற்ற மற்றும் குழந்தைகள் இறந்த பெற்றோருக்கு குழந்தைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுப்பட்டு வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகள் பாகிஸ்தான் பெறுமதில் 70 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 3 லட்சம் ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் விற்பனை தொடர்பில் இதுவரையில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பாகிஸ்தான் காவற்துறையினர் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தாதியொருவர் உட்பட 5 பெண்களும் 2 சுகாதார பணியாளர்களும் இடை முகவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திஸ்தாபனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.