19வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் காரணமாக கணக்காய்வாளர் திணைக்களம் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்ஹ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கணக்காய்வு சட்டமூலம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
19வது திருத்தச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களால் கணக்காய்வாளர் திணைக்களம் ஸ்திரமற்ற நிலையில் உள்ளது.
உதாரணமாக 15 உப கணக்காய்வாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மாத்திரமே உள்ளார்.
எனவே இது பாரிய பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் கணக்காய்வாளர் திணைக்களம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்ஹ தெரிவித்துள்ளார்