நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மருத்துவ பீட மாணவ செயற்பாட்டு குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் இன்று கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார்.
ரயன் ஜயலத் உள்ளிட்ட ஐந்து மாணவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன காவற்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவற்துறையினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போதே இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.