ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இந்த மாதம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பான் கீ மூன் இலங்கைக்கான விஜயம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.