கூட்டு பொறுப்பை மீறும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் சம்பந்தமாக கடுமையான தீர்மானம் எடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு நேற்று பிற்பகல் அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியிருந்தது. இதன்போது விஜேயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் கூறுவது சம்பந்தமாகவும் வழக்குகள் தாமதிக்கப்படுவதாக கூறப்படுவது தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், மத்திய செயற்குழு கூட்டத்தில் விஜேயதாஸ ராஜபக்ஷ தொடர்பில் உறுப்பினர்களின் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்ததாகவும், இது தொடர்பில் குழுவொன்று அமைத்து குழுவின் பரிந்துரைப்ப்டி தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறினார்.