உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பாதிக்கும் எந்தவொரு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படாது

321 0

உள்நாட்டு கைத்தொழில்களுக்கு அல்லது உள்நாட்டு வர்த்தகர்களுக்கு அநீதி ஏற்படும் வகையிலோ அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலோ எந்தவொரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளிலும் அரசாங்கம் கைச்சாத்திடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வது, தேசிய கைத்தொழில்களை பாதுகாத்துக் கொண்டு தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் கொள்கையுடனேயே என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தேசிய கைத்தொழில் சபையின் வருடாந்த திட்டமிடல் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்தை மிகவும் முறைப்படுத்தி, தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காகவே தேசிய பொருளாதார சபையை நிறுவியதாக ஜனாதிபதி மேலும் கூறினார்.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது போன்றே தேசிய கைத்தொழிற்துறையின் அபிவிருத்தி என்பன தேசிய பொருளாதார சபை நிறுவுவதற்குறிய நோக்கம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தேசிய கைத்தொழிற்துறையை அபிவிருத்தி செய்து சிறிய மற்றும் நடுத்தர அளவு முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்காக அடுத்த சில மாதங்களுக்குள் புதிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a comment