மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று மாளிகாவத்தை நீதவானட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10ம் திகதி வழக்கு விசாரணையின் போது அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமை தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் விளக்கம் கேட்ட நீதிபதி, உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.
பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இதற்கு முன்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.