பேராதனை பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை சுகாதார அமைச்சுக்கு முன்னால் அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.
பாடநெறி ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தேவைப்படும் மருத்துவ பயிற்சியை பெற்றுக் கொள்வதற்காக கண்டி மாவட்டத்திற்கு வௌியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டி ஏற்படுவதால் தாம் சிரமங்களை எதிர் நோக்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக கண்டி பொதனா வைத்தியசாலை உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில் அரச வைத்தியசாலைகளில் தமக்கு தேவைப்படும் மருத்துவ பயிற்சியை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.