ராஜபக் ஷ குடும்பத்தினருடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்கின்ற யோசனை நாட்டின் அரசியலமைப்பிற்கும், சட்டத்தின் முன் சகலரும் சமம் என்கின்ற தார்மீகத்திற்கும் முரணானதாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசாங்கத்திலுள்ளவர்களின் ஊழல் மோசடிகள் வெளிப்பட்டுக்கொண்டிருக் கின்றன. இவ்வாறான சூழலில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக எனது குடும்ப உறுப்பினர்களை குற்றப் புலனாய் வுப் பிரிவு மற்றும் பாரிய நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைத்து விசாரணை நடத்துகின்றனர்.
எனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிகொண்ட சொத்துக்கள் நீதிமன்றினால் அல்லது அரசாங்கத்தினால் அரசுடமையாக்கியுள்ளதாக அரசாங்கத் தரப்பு வெளியிடும் கருத்தில் எவ்வித உண்மை யும் இல்லை.
எனவே எனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான எந்தவொரு சொத்தும் அரசுடமையாக்கப்படவில்லை. எனினும் வேறு சிலருக்குச் சொந்தமான சொத்துக்களை எனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமானது என காண்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
ஆகவே நல்லாட்சி அரசாங்கம் தவிர்த்து வேறு எந்த அரசாங்க மும் எதிர்த்தரப்பு அரசி யல்வாதிகளுக்கோ அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கோ இவ்வாறு நெருக்கு தல் செய்யவில்லை எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.