கேகாலை பொலிஸ் அதிகார பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் சுற்றிவளைப்பின் போது 114 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் 37ஆயிரம் ரூபா வரையில் கைப்பற்றப்பட்டதாகவும் கேகாலை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி பிரனீத் மானவடு தெரிவித்தார்.
வீதி விதிமுறைகளை மீறிய மோட்டார் வாகன ஓட்டுனர்கள் 54 பேர், பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் தொடர்புடைய சந்தேக நபர்கள் 24 பேர் சூது விளையாட்டில் ஈடுபட்ட 12 பேர் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து வைத்திருந்த 14 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் 2 பேர், போதைப் பொருள்வைத்திருந்த சந்தேக நபரொருவர் என 114 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.