பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி மீது ஊழல் வழக்கு

273 0

நவாஸ் செரீப்பை தொடர்ந்து முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி (62) மீதும், பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் பனாமா கேட் பேப்பர்ஸ் ஊழலில் சிக்கி பதவி இழந்தார். அது அந்த நாட்டு அரசியலில் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி (62) மீதும், பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

ஆசிப் அலி சர்தாரியும், அவரதுமனைவியும், முன்னாள் பிரதமருமான பெனாசிர் பூட்டோவும் சட்டவிரோதமாக பாகிஸ்தானிலும், வெளிநாட்டிலும் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன.

கடந்த 2001-ம் ஆண்டில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. சர்தாரி அதிபராக பதவி ஏற்றதை தொடர்ந்து அந்த வழக்குகள் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அவர் பதவி இழந்ததை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அனேகமாக 6 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment