தமிழ் மக்களுக்கான திட்டங்களில் அரசாங்கம் அர்ப்பணிப்பு – சந்திரிகா

356 0

santhirikka-e1453686022791தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களில் அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
காணாமல் போனோரின் உறவினர்கள் கடந்த காலங்களில் தமது உறவுகளை மீட்பதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
எனினும் கடந்த அரசாங்கம் அது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.
காணாமல் போனோர் தொடர்பில் நிரந்தரமான தீர்வொன்றை பெற்று கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
அடுத்துவரும் ஓரிரு வருடங்களில் அதுதொடர்பான செயற்பாடுகள் நிறைவுச்செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
காணாமல் போனார் விடயத்தில் எவரேனும் தொடர்பு கொண்டிருப்பது உறுதிசெய்யப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு பொதுமக்களின் பங்களிப்பு அவசியமானது எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க குறிப்பிட்டார்.