ஈழ யுத்தத்தில் காணமல் போனவர்களை கண்ணீரோடு தேடும் தமிழ் உறவுகளின் கண்ணீர் கதை தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
கார்த்திகை மாதம் வந்ததும் கல்லறை தெய்வங்களை விதைத்த இடம் தேடி அலையும் இரத்த உறவுகளும் இதய உறவுகளும் மௌனமாக ஊர் ஊராய் அலையும் அந்த உயிர்வலி உலகத்திற்கு தெரியுமா?
களத்தில் பிள்ளை வீழ்ந்த போது கதறி அழுது, தேசத்திற்காய் தன்னை அர்பணித்த பிள்ளையை கல்லறையில் கண்டு கண்ணீரால் நனைத்து வருடம் தோறும் ஆறுதல் அடையும் பெற்றோர். இன்று கல்லறைகளை காணாது கனத்த இதயத்துடன் வலி சுமந்து வாழ்கின்றனர்.
தமிழீழத்தை ஆக்கிரமித்த சிறிலங்கா படையினர் எம் மக்களை மட்டும் அழிக்கவில்லை. எம் வீரர்களின் துயிலும் இல்லங்களையும் ‘புல்டோசர்’ போட்டு கிழறி எறிந்தார்கள்.
வீதிகளில் அங்காங்கே இருந்த மாவீரர்களின் நினைவுச் சின்னங்களை உடைத்து எறிந்தார்கள். யுத்தத்தின் போது போர் தர்மங்களை மீறிய சிறிலங்கா படையினர் . யுத்தத்தை முடித்தாக சொல்லிய பின்னரும் போர் ஒழுக்க நெறிகளை மீறினார்கள்.
ஆனால் ,தமிழீழ விடுதலைப்புலிகள் இந்திய , சிறீலங்கா இராணுவ வீரர்களின் உடல்களையோ, சின்னங்களையோ ஒரு போதும் சிதைக்கவில்லை. இது தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் போர் ஒழுக்க நெறி. இதுவே சர்வதேச போர் நெறியும் கூட.
அமைதிப் படை என்ற போர்வையில் வந்த இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளுடன் போர் செய்யத வேளை யுத்தத்தில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினருக்காக 1987 – 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கல்வியங்காட்டு இராச பாதையில் பிடாரித்தோட்டம் பகுதியில் நினைவிடம் ஒன்று இந்திய அமைதி படையால் அமைக்கப்பட்ட து . இது தனியாருக்கு சொந்தமான காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய இராணுவம் வெளியேறிய பின்பும் கூட விடுதலைப்புலிகள் அவ் நினைவு தூபியை அழிக்கவில்லை. இது தான் விடுதலைப்புலிகளின் யுத்த தர்மம்.
எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வரும் இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் குழுவினர் இந்த நினைவுத் தூபியில் நினைவஞ்சலி செலுத்தவுள்ளனர்.
குறித்த நினைவுத் தூபியை சுத்தம் செய்யும் பணியில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதே கோப்பாய் மண்ணில் எங்கள் மாவீரர் துயிலுமில்லத்தை உடைத்து எறிந்த சிறிலங்கா இராணுவம் இந்த புனிதர்கள் உறங்கிய விதை குழியின் மேல் தனது 511 படைப்பிரிவு முகாமை கட்டி ஆக்கிரமித்துள்ளமை எம் மக்களின் ஆத்மாவை பிழிய வைத்துள்ளது.
Pingback: URL
Pingback: URL
Pingback: รวมโรงงานจีน
Pingback: HUAY SURE
Pingback: ทางเข้าpg168
Pingback: แทงบอลออนไลน์เกาหลี
Pingback: highbay
Pingback: เคอรี่889
Pingback: ดูบอลสด66
Pingback: ออกแบบตกแต่งภายในคอนโด
Pingback: ยางไดอะแฟรม
Pingback: KC9 คาสิโนออนไลน์ อันดับ 1
Pingback: bgame777
Pingback: jili cityslot เล่นผ่านเว็บ ระบบมือถือ
Pingback: Ricky Casino
Pingback: mostbet