விஜயதாச தொடர்பான தீர்மானம் எதிர்வரும் திங்களன்று – கபீர்

1071 0

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய நீதி அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வாக்களித்ததற்கு அமைய ஊழல் மோசடி தொடர்பிலான வழக்குகளைத் துரிதப்படுத்தாமை தொடர்பில் அவருக்கெதிரியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

சுமார் இரண்டு மணி நேர விமர்சனங்களுக்குப் பின்னர் பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ; ஊழல் மோசடி தொடர்பிலான வழக்குகள் தொடர்பில் தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது என குறிப்பிட்டார்.

“நீதி அமைச்சரின் இந்தக் கருத்தை அனைவரும் எதிர்த்ததாக” இது சம்பந்தமாக கலாநிதி ஹர்ஷ டி. சில்வா தனது ட்விட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, கூட்ட முடிவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் விஜயதாச ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

மேலும், கூட்டுப் பொறுப்பை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கழுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி கூட உள்ளதாகவும், அதன்போது இந்த தீர்மானத்தை அறிவிப்பதாகவும் அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment