கட்சியில் வேண்டப்படாத ஒருவராக மாறியிருக்கும் எதிர்கட்சி தலைவர் தலைவர் சி.தவராசா அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் சாதுரியத் தினால் எதிர்கட்சி தலைவர் பதவியினை தக்கவைத்து கொண்டு ஊடகங்களில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காக எங்களை கையாளாகதவர்களாக காட்ட நினைக்கிறார்.
மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். வடமாகாணசபையின் 3 வ ருடங்கள் மற்றும் 9 மாதங்களின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான 2ம் அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடை பெற்று வருகின்றது.
இதன்போது கடந்த 21ம் திகதி நடை பெற்ற விசேட அமர்வில் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா முன்வைத்த குற்றசாட்டுக்கு இன்றைய அமர்வில் பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் முதல்வர் கூறுகையில்,
தனது கட்சியில் வேண்டப்படாத ஆளாக மாறியிருக்கும் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் சாதுரியத்தால் எதிர்க் கட்சி தலைவர் பதவியை தக்கவைத்து கொண்டு பத்திரிகைகளில் விளம்பரம் தேடுகிறார். அதற்காக எங்களை கையாளாகாதவர்களாக காட்ட நினைக்கிறார்.
நாம் பல விடயங்களை செய்திருக்கிறோம். ஆனால் அவை தமக்கு ஏற்றால்போல் இல்லை என்பதால் அதனை விமர்சிக்கிறார். மேலும் உங்கள் எதிர்பார்ப்புக்களும், ஊகங்களும் உங்கள் வாழ்க்கை முறை மற்றும் கட்சி கொள்கைகளை தழுவியதாக உள்ளது.
எனவே எதிர்கட்சி தலைவர் சி.தவரா சா கட்சியில் வேண்டப்படாத ஆளாக மாறியுள்ளதால் அடுத்த தேர்தலில் தனக்கு ஆசனம் பெறுவதற்காக எதிர் கட்சி தலைவர் சி.தவராசா ஊடகங்களில் விளம்பரம் தேடுகிறார். என்றார் இதனை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் எழுந்து கத்தினார்.இதனால் சபை சற்று நேரம் காரசாரமாக காணப்பட்டது.