கிளிநொச்சியில் டெங்கு பரவும் சூழல் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை – சுகாதார பிரிவினர்

700 0

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்பு  வளரும் சூழல் காணப்பட்டால் அந்த சூழல் காணப்படுகின்ற இடத்தின் உரிமையாளா் மீது நாளை முதல்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி சுகாதார பிரிவினா் அறிவித்துள்ளனா்.

மாட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது  அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றைய  தினம் புதன் கிழமை  மாவட்டத்தின் பல இடங்கள் பரிசோதனைக்குட்ப்படுத்தப்பட்டு இன்று வியாழக்கிழமை பொது மக்கள் மற்றும் படையினா் ஆகியோா் பங்குகொண்டு துப்பரவு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனா். இதன் தொடர்ச்சியாக நாளை வெள்ளிக்கிழமை வியாபார நிலையங்கள் பொது இடங்கள் என்பன ஆய்வுக்குட்ப்படுத்தப்பட்டு  அவற்றில் டெங்கு நுளம்பு வளரும் சூழல் காணப்பட்டால் அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட பணிப்பிற்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும்  இதற்காக கொழும்பிலிருந்து சுகாதார அமைச்சின் விசேட குழுவொன்று கிளிநொச்சிக்கு வருகைதந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனா்.

தை மாதத்திலிருந்து  இன்று வரையான (15.08.2017) 227 நாட்களில்  கிளிநொச்சி பொது  வைத்தியசாலையில் மொத்தம்  815  நோயளர்கள்  டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கலாம்  என சந்தேகிக்கப்பட்டுச்  சிகிச்சை வழங்கப்பட்டது. இவர்களுள்  585 நோயாளர்கள்  கிளிநொச்சி   மாவட்டத்தைச்  சேர்ந்தவர்கள். ஏனையோர்பிறமாவட்டத்தைச்  சேர்ந்தவர்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment