நோர்வே பிரதமர், எதிர்கட்சி தலைவரை சந்தித்துள்ளார்.

323 0

1471058446_956943_hirunews_535653நோர்வே நாட்டின் பிரதமருக்கும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில்போது தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் நோர்வே பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு ஆகிய விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் துரிதமாக இடம்பெற வேண்டும்.
இந்த செயற்பாடுகளில் சர்வதேசத்தின் பங்களிப்பும் அவசியம் எனவும் எதிர்க்கட்சித்தலைவர் எடுத்துரைத்தார்.
தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வொன்றினை பெறுவது மிகவும் அத்தியாவசியமானது எனவும் எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் உட்பட்ட பல நடைவடிக்கைகளுக்கு நோர்வேயின் ஆக்கபூர்வமான பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என நோர்வேயின் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.