சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் அதிகார மோதலின் தாக்கத்தில் இருந்து இலங்கையால் வெளியேற முடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
த ஸ்டேட்மென் என்ற சர்வதேச ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கை, பங்களாதேஸ் போன்ற நாடுகள் இந்தியா மற்றும் சீனா ஆகிய ஆசியாவின் பெரிய நாடுகளில் தங்கி இருக்கும் நிலை தொடர்கிறது.
ஆனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், இந்துசமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதில் நிலவும் போட்டிநிலைமை மற்றும் எல்லைப் பிரச்சினை என்பன, பனிப்போருக்கான அறிகுறிகளைப் போலத் தென்படுகின்றன.
இந்த அறிகுறிகளின் தாக்கம் இலங்கை உள்ளிட்ட இந்து-சீன அண்மைய நாடுகளிலும் பிரதிபலிப்பதை தவிர்க்க முடியாது என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இதன் ஊடாக இலங்கைக்கு அதிக நன்மைகள் கிடைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.