ராஜபக்ஷ குடும்பத்தார் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில், இதுவரையில் 30 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சொத்துக்கள் தற்போது நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் பல அரச சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கொழும்பு துறைமுக நகரின் 85 சதவீதமான உரிமை சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதுடன், ஹம்பாந்தொட்டை துறைமுகத்தையும் குத்தகைக்கு வழங்க மகிந்தவின் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் மங்கள தெரிவித்துள்ளார்.
தற்போது மக்கள் அவரை முழுமையாக வெளியேற்றுவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாகவும் மங்கள சமரவீர தமது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.