ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் நாட்டில் பெய்து வந்த பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் பிரிடவுன் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
அங்குள்ள ரெஜன்ட் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்து விட்டது.
எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள் என்ற பரிதாப நிலை, அங்கு உள்ளது.
இன்னும் 600 பேரை காணவில்லை. இடிபாடுகளுக்கு இடையே அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
அந்த நாட்டின் ஜனாதிபதி எர்னஸ்ட் பாய் கொரோமா, ஒட்டுமொத்த சமூகமும் அழிந்து விட்டது என மிகுந்த வேதனையுடன் கூறினார்.
உலக நாடுகளின் அவசர உதவியை அவர் கோரி உள்ளார்.