நெடுந்தீவில் இயங்கும் அரச செயலகங்கள் எவற்றிலும் நிரந்தரமான பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் இன்றி உதவியாளர்கள் பணிபுரிவதோடு கூட்டங்களிற்கு மட்டுமே அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வருவதாக நேற்றைய தினம் இடம்பெற்ற நெடுந்தீவுப் பி்ரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் இணைத் தலைவர்களில் ஒருவரான சி.சிறிதரன் தலமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டது .
இங்கு கலந்து கொண்ட மக்கள் பிரதிநிகள் இது தொடர்பில் மேலும் சுட்டிக்காட்டுகையில் ,
நெடுந்தீவில் இயங்கும் அரச செயலகங்கள் எவற்றிலும் நிரந்தரமான பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் இன்றி உதவியாளர்கள் பணிபுரிவதோடு கூட்டங்களிற்கு மட்டுமே அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வருவதாக நேற்றைய தினம் இடம்பெற்ற நெடுந்தீவுப் பி்ரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதில் நெடுந்மீவில் இயங்கிய பாடசாலைகளில் ஆங்கிலம் , சங்கீதம் , சித்திர பாடங்களிற்கு ஆசிரியர்கள் கிடையாது.
இதேபோன்று இங்கு இயங்கும் ஒரே ஓரு வைத்தியசாலையில் இருந்த இரு வைத்மியர்களுமே வெளிநாடுகளிற்குச் சென்றவிட்டனர் . இதனால் கடந்த வாரத்தில் மட்டும் 3 நாள் தொடர்ச்சியாக பூட்டப்பட்டிருந்த்து. விவசாயத்திணைக்களம் , மீன்பிடித் திணைக்களம் , நீர் வழங்கல் திணைக்களம் , மரண விசாரணை அதிகாரி , இவ்வாறு எந்த திணைக்களத்திலும் அதிகாரிகள் கிடையாது அனைவருமே பதில் உத்தியோகத்தர்களே நெடுந்தீவில் பணிபுரிகின்ற்றர். அவ்வாறானால் எவ்வாறு நெடுந்தீவு அபிவிருத்தியடையும்.
இந்த அதிகாரிகளிடம் நாம் போய் எதையாவது கூறினால் அவர்கள்போய் தமது அதிகாரிகளிடம் கூறுவார்கள். அதிகாரிகள் எதையாவது கூற அதைக் கேட்டுவந்து இங்கு கூறுகின்றனர். எனவே பொறுப்பான அதிகாரிகள் இங்கே நியமிக்கப்படவேண்டும். என்றனர்.