சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி சிகரெட்டுகளை வைத்திருந்த நபரொருவர் மருதானையில் வைத்து பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிகரெட் தொகை பாரவூர்தியில் இரகசியமான முறையில் வைக்கப்பட்டு, கொண்டு செல்ல முற்பட்டவேளையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபரிடமிருந்து 50 இலட்சத்துக்கும் பெறுமதியான சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.