விஜேதாச குறித்த இறுதித் தீர்மானம் இன்று

249 0

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியத்துவம் மிக்க மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (17) பிரதமரும் அக்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இன்று மாலை 3.00 மணிக்கு சிரிக்கொத்த தலைமையத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், நிதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதா? இல்லையா? என்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்வரும் தேர்தல் மற்றும் அதற்கு முகம்கொடுப்பதற்கு கட்சியைத் தயார்படுத்தல் என்பன தொடர்பிலும் காத்திரமான தீர்மானங்கள் பல எடுக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Leave a comment