ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை ஊடங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தேர்தலை பகுதி பகுதியாக நடத்தாமல் மக்களுக்கு சிரமம் இன்றி ஒரே தடவையில் நடத்த வேண்டும் என்று மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி மாகாணசபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்த வேண்டும்.
அதற்கு மாகாண சபைகளின் காலம் நிறைவடையும் வரை காந்திருந்து இறுதியாக ஒரே தடவையில் அனைத்தையும் கலைத்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும்.
அதற்கு 6 மாத காலம் வரை காத்திருக்க வேண்டும்.
அன்றேல் விசேட சட்டமூலம் ஒன்று கொண்டுவந்து, மாகாண சபைகளை ஒரேதடவையில் கலைத்துவிட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டும்.
தேர்தலை ஒரே தடவையில் நடத்தி முடிப்பது நாட்டின் அபிவிருத்திக்கும் மக்களுக்கும் பாதிப்பில்லாமல் இருக்கும்.
தற்போது ஜனாதிபதி தேர்தலையும் பொது தேர்தலையும் ஒரே தடவையில் நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்தின குறிப்பிட்டுள்ளார்.