இந்த வருட இறுதிக்கு முன்னர் தேர்தல் தொடர்பில் உறுதியாக அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வென்றில் வைத்து ஊகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பில் இந்த வருட இறுதிக்கு முன்னர் நிச்சயம் அறிவிக்கப்படும்.
பரீட்சைகள் காரணமாக தேர்தல் ஒருசில தினங்கள் முற்கூட்டியோ, தாமதமாகவோ இடம்பெறலாம்.
ஒக்டோபர் அல்லது நொவம்பர் மாத்தில் அந்த அறிவிப்பு வெளியாகலாம்.
எவ்வாறாயினும் இந்த வருட இறுதிக்குள் உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் என்பது உறுதியானது என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.