ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதியை ‘சைட்டம் தீப்பற்றிய இரவு’ என பெயரிட்டு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் உப செயலாளர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.
மலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து தீர்வு பெற்று தருவதற்கு அரசாங்கம் முன்வரவில்லை.
அமைச்சர் ராஜித்த சேனாரத்தினவுக்கு விருப்பமான வகையில் 2500 லட்சம் ரூபா செலவு செய்து நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையை இணைத்து கொள்ள தயாராகிறார்.
இந்தநிலையில், ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதியை ‘சைட்டம் தீப்பற்றிய இரவு’ என பெயரிட்டு போராட்டம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த வாரம் முதல் அராங்கத்திற்கு உரைக்கும் வகையில் பல தொழிட்சங்க போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளன என்று அவர் குறித்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளார்.