தற்காப்பு முறைகளை பின்பற்றுவதை நிறுத்தி விட்டு துரத்தி சென்று தாக்கும் முறையையே நாம் செய்யவேண்டுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.
62 இலட்சம் மக்களின் ஆணையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற சத்தியாகிரக போராட்டம் நேற்று கொழும்பு விகார மகா தேவி பூங்காவில் இடம்பெற்றது.
இங்கு கலந்துகொண்டு உரியற்றும் போதே தம்பர அமில தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி இரண்டரை வருடங்களை கடத்தியுள்ளார், அதே போல் பிரதமர் இரண்டு வருடங்களை கடத்தியுள்ளார். இது மக்களுக்கு போதுமாகிவிட்டது. பொதுமக்களின் சிவப்பு சமிக்சை தாண்டிச்சென்று விட்டது. எனவே, அதனை கருத்தில் கொண்டு பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பயமின்றி கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க முன்வாருங்கள் என இதன்போது தம்பர அமில தேரர் அழைப்பு விடுத்தார்.