“NSB i Saver” அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

253 0

இலங்கை மக்களின் சேமிப்புப் பழக்கத்தை மேலும் வளர்க்கும் நோக்கில் அதனை புதிய தொழில்நுட்பத்துடன் இணைத்து தேசிய சேமிப்பு வங்கியும் ஸ்ரீ லங்கா டெலிகொம் மொபிடெல் நிறுவனமும் இணைந்து வடிவமைத்துள்ள “NSB i Saver” சேவையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (16) முற்பகல் கொழும்பு தேசிய சேமிப்பு வங்கி தலைமை அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.

“NSB i Saver” சேவையானது டிஜிடல் மயப்படுத்தலின் புதியதோர் அனுபவமாகும். நாடளாவிய ரீதியில் உள்ள 16,000 க்கும் அதிகமான மொபிடெல் முகவர் நிலையங்களின் ஊடாக “NSB i Saver” சேவையின் மூலம் எந்த நேரத்திலும் இலகுவாக பணத்தை தேசிய சேமிப்பு வங்கிக் கணக்கில் வைப்புச்செய்ய முடியும்.

அமைச்சர்களான கபீர் ஹாசிம், ஹரீன் பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் தாராநாத் பஸ்நாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன, தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் அஸ்வின் டி சில்வா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment