பந்துலவிடம் குற்ற புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

243 0

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 25ம் திகதி தனது வீட்டுக்கு இரகசிய பொலிஸார் வரவிருப்பதாக தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய லொத்தர் சபை தொடர்பில் தான் வெளியிட்ட தகவல்களே தன்னிடம் விசாரணை நடாத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தன்னை எவ்வாறாயினும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வரவைப்பதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கருத்து பாராளுமன்ற ஹன்சாட்டில் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment