வடமாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட புதிய பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வு

257 0
வடமாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட புதிய பொதுச்சேவைகள் ஆணைக்குழு இன்று தனது ஆரம்ப அமர்வினை நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பொதுச்சேவைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடாத்தியது.
முதலாவது ஆரம்ப நிகழ்வில் ஆளுநரின் பொதுசன தொடர்பு அதிகாரி நிசாந்த அல்விஸ், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகன்ராசு, பிரதம செயலாளர் அலுவலகத்தை சார்ந்த பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஒரு நிமிடம மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான நிகழ்வில் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகன்ராசு உரையாற்றினார். வடமாகாணத்தில் அதிகாரிகளின் திறன்களை அதிகரிக்க செய்வதற்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டை தாம் மிகவும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
இதன் பின்னராக பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் அரசாங்க அதிபர் பத்மநாதன் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் பொதுச் சேவைகள் ஆணைக்குழு அரசியல் கலப்பற்றதாக இருக்கும் ஒரு அமைப்பு என்றும் எதிர்காலத்தில் வட மாகாணத்தில் நிர்வாக மட்டத்தில் காணப்படும் பல பிரச்சினைகளுக்கு ஆணைக்குழு விரைவான நடவடிக்கைளை பாரபட்சம் இன்றி மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார். பொதுச் சேவைகள் ஆணைக்குழு முறைப்பாடுகள் மற்றும் தீர்மானங்கள்,  பருந்துரைகளை காலம் தாத்தாது முடிவுறுத்த வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கைக்கு ஏற்ப நாம் செயற்படுவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

Leave a comment