கலப்பு முறையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமூலம்-ரோஹித்த அபேகுணவர்தன

224 0
கலப்பு முறையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மகிந்த அணியினர் தீர்மானித்துள்ளதாக, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்றையதினம் மகிந்த அணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது, குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்து அதனை நிறைவேற்றுவதன் ஊடாக, அரசாங்கத்தை உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தும் வகையில் உந்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்பதே தங்களின் திட்டம் என்றும் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a comment