மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி தாய் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.பொலன்னறுவை புலஸ்திகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.34 வயதுடைய தாய் மற்றும் 7 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
புலமை பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்பொன்று அருகில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.அங்கு புலமை பரிசில் பரீட்சையில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பகல் உணவு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு உதவி செய்யும் நோக்கில் தாய், தனது மகனுடன் சென்றுள்ளார்.
இதன்போது வீட்டுக்கு அருகில் உள்ள மின்சார தூண் ஒன்றில் இருந்து அறுந்து வீழ்ந்து கிடந்த மின் கம்பியை அந்த சிறுவன் தொட்டுள்ளார்.
இதனால் சிறுவனை மின்சாரம் தாக்கியுள்ள நிலையில், அவரை காப்பாற்ற தாய் முற்பட்டுள்ள போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.