அனுராதபுரம் , மாத்தளை மற்றும் குருணாகலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கஹல்ல பல்லேகெலே வனப்பகுதியில் கல்கிரியாகம பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மான்களை கொலை செய்யும் வேட்டைக்காரர்கள் , மணல் கடத்தல்காரர்கள் மற்றும் கால்நடை திருட்டு குழுவினர் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு மற்றும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிரியாகம வனத்துறை அலுவலக அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது , 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் , இந்த சுற்றிவளைப்பில் , மான் இறைச்சி, துப்பாக்கிகள் , துப்பாக்கி ரவைகள் , கத்தி , மின் விளக்கு , இரண்டு உழவு இயந்திரங்கள் , டிபர் வாகனமொன்று மற்றும் கால்நடைகளை கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பாரவூர்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்கிரியாகம வனத்துறை அலுவலக பிரதானி டீ ராமசிங்க தெரிவித்திருந்தார்.