இந்தியாவில் சிறுபான்மையினர் மீது பசு பாதுகாவலர்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
016-ம் ஆண்டு சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்கா நடத்திய ஆய்வின் அறிக்கை அண்மையில் டிரம்ப் நிர்வாகத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் நேற்று வாஷிங்டன் நகரில் வெளியிட்டார்.
அதில் இந்தியா குறித்து கூறப்பட்டு இருப்பதாவது:-
பா.ஜனதா தலைமையின் கீழ் நடந்து வரும் ஆட்சியில் சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருவது குறித்து, நாகரிக சமூக அமைப்புகள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றன. இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அவர்களது வழிபாட்டு தலங்களும், சொத்துகளும் சேதப்படுத்தப்படுகின்றன.
சிறுபான்மை இனத்தவர் மீது பசு பாதுகாவலர்கள் நடத்தும் தாக்குதல்களை மத்திய அரசு தடுக்க தவறி விட்டது. மேலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.