இத்தாலியில் உள்ள பைசா சாய்ந்த கோபுரத்தை தகர்க்க சதி திட்டம்

346 0

201608131008355920_Italy-expels-Tunisian-man-who-threatened-to-attack-Leaning_SECVPFஇத்தாலியில் உள்ள பைசா சாய்ந்த கோபுரத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக துனிசியாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளில் வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம் பலரை கொன்று குவித்தனர். இந்த நிலையில் அவற்றின் அண்டை நாடான இத்தாலியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

துனிசியாவைச் சேர்ந்த பிலெல் சியாகுய் (26) என்ற வாலிபர் சமூக வலை தளத்தில் ஒரு பரபரப்பு தகவல் வெளியிட்டிருந்தார். அதில் ஐரோப்பாவில் தாக்குதல் நடத்தும் ஐ.எஸ். இயக்கத்தினரின் நடவடிக்கையை பாராட்டுகிறேன் என தெரிவித்திருந்தார்.

மேலும், ‘இத்தாலியில் துஸ்கான் நகரில் உள்ள பைசா சாய்ந்த கோபுரத்தை குண்டு வைத்து தகர்ப்பேன் என்றும் கூறியிருந்தார். இது உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது.

மேலும் துஸ்கான் நகரின் நினைவு சின்னமாகவும், சுற்றுலா பயணிகளை கவர்ந் திழுக்கும் மையமாகவும் திகழ்கிறது.

இத்தகவலால் உஷாரான இத்தாலி அரசு பைசா கோபுரத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது. மேலும் துனிசியாவைச் சேர்ந்த பிலெல் சியாகுய் கைது செய்யப்பட்டார். மேலும் அங்கு பதுங்கியிருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை களை எடுக்கும் வேட்டை தீவிரம் அடைந்துள்ளது.