மாத்தறை – கதிர்காமம் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

264 0

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெறுகின்ற எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக மாத்தறை – கதிர்காமம் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சமூர்த்தி பெறுநர்கள் சிலர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

இதுவரை தமக்கு கிடைக்கப்பெற்ற சமூர்த்தி உதவி தொகையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக குற்றம் சுமத்தி இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதுதவிர இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் சமூர்த்தி பெறுநர்களினால் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அத தெரண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

Leave a comment