தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு – மாஃபா பாண்டியராஜன் 

414 0

தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தினை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம் என சட்ட சபை உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனைக் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் குறித்து தினகரன் கருத்து வெளியிடுவது கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என தினகரன் தெரிவித்துள்ளமையை வரவேற்கிறோம்.

அத்துடன், நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபின் தனது கருத்தினை தெரிவிக்க வேண்டும். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்போம் எனவும் மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment