பாகிஸ்தான் போரின் போது தன் சொந்த நகைகளை கொடுத்தவர் ஜெயலலிதா – எடப்பாடி

426 0

பாகிஸ்தான் போரின் போது தன் சொந்த நகைகளை கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார்.

கோட்டை கொத்தளத்தில் அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் முதலமைச்சர் தனது சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு வேகமாக முன்னேறி வருகிறது. ரூ.1,114 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர் என குறிப்பிட்டார்.

இதனிடையே, பாகிஸ்தான் போரின் போது, தன் சொந்த நகைகளை அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், கொடுத்தவர் ஜெயலலிதா என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார்.

Leave a comment