பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை மைத்தியிடம் கையளிப்பு

328 0

Justice-Maxwell-Paranagamaகாணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணைசெய்யம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த குறித்த குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம இது இறுதி இடைக்கால அறிக்கை என்ற போதிலும் இவ்வறிக்கை முழுமையான அறிக்கையாக தயாரிப்பதற்கு இயலாமற்போனதாக தெரிவித்தார். இதற்குக் காரணம் ஆணைக்குழு கலைக்கப்பட்டமையே எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஒப்படைக்கப்பட்டுள்ள இறுதி இடைக்கால அறிக்கையில் உள்ள விடயங்கள் தற்போது வெளியிட முடியாது எனத் தெரிவித்ததுடன் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே அதனை வெளியிடமுடியும் எனவும் தெரிவித்தார்.