செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவிருக்கும் பொலித்தீன் தடையானது இலங்கையில் சில்லறைபொருளாதாரம் ஏற்றுமதி மற்றும் கழிவகற்றல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் உள்ளன.
இலங்கையின் உயர் அடர்த்தி பொலித்தீன் மற்றும் மீள்சுழற்சி கைத்தொழிலில் உள்ளவர்கள் இத்தடைக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இத்தடையினால் நாடு பூராகவும் உள்ள 345,000 பேர் தமது தொழில்களை இரவோடு இரவாக இழப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சி சங்கத்தின் தலைவர் அனுரா விஜயதுங்க உட்பட 300க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களுக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அமைச்சின் உயர் நிலை உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையில் வருடாந்த பொலித்தீன் உற்பத்தியில் 80சதவீனமானவை அதிஅடர்த்தியில் உள்ளன. மேலும் ஏனைய 20 சதவீதமானவை குறைந்த அடர்த்தியில் உள்ளன. உயர் வலு காரணமாக அவை சுற்றாடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. வருடாந்தம் உற்பத்தியாளர்கள் 40 மில்லியன் அதி அடர்த்தி கொண்ட பொலித்தீனை உற்பத்தி செய்கிறார்கள்.
இது செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து தடை செய்யப்படுகிறது.வருடாந்த அதி அடர்த்தி கொண்ட பொலித்தீன் உற்பத்தியின் பெறுமதி 12.87 பில்லியன் அமெரிக்க டொலராகும்.அத்துடன் இத்துறையில் 345,000 ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 45,000 பேர் நேரடியாகவே தொழில் புரிபவர்கள்.
பொலித்தீன் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நாங்களும் சுற்றாடலை பாதுகாப்பதற்கு உதவியாக இருக்க விரும்புகிறோம். 800 அதி அடர்ந்த இயக்குநர்கள் தமது கைத்தொழில்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த தடை அறிவிக்கப்பட்டதன் பின்பு பணப்பரிமாற்றத்தில் நாம் மிகவும் மோசமான நிலையில் உள்ளோம். எவரும் பணம் தர முன்வருகிறார்கள் இல்லை. இதனால் இக் கைத்தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
முழுமையாகவே அதி அடர்த்தி கைத்தொழில் ஒரு ஸ்தம்பித நிலை அடைந்துள்ளதாகவும் அத்துடன் இத்தடை பற்றி முன் அறிவித்தல் எதுவும் கொடுக்கப்படவில்லை என இச் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.