நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய இம்மாதம் 17ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு இராஜினாமா செய்யாவிடின் 17ம் திகதியின் பின்னர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்