ஷிரந்தி ராஜபக்ஷ சீ.ஐ.டி.யில் ஆஜர்

246 0

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்றுமுன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைக்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முன்னால் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நிதி மோசடி குறித்த விசாரணைக்காக மஹிந்தவின் மகன் ரோஹித்த, சற்றுமுன் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்

Leave a comment