பாராளுமன்றத்திற்குள் சுயாதீன வரவு செலவு காரியாலயம்

249 0

பாராளுமன்றத்திற்குள் சுயாதீன வரவு செலவு காரியாலயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இதனூடாக எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வரவு செலவு திட்டம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த வேலைத் திட்டத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பல உதவி மற்றும் ஆலோசனை வழங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளதுடன், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் பதிலளித்துள்ளார்.

Leave a comment