வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடிய சம்பவம் தொடர்பில் வாத்துவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 10ம் திகதி பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றை உடைத்து சுமார் 08 இலட்சத்து 35,500 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த மிரிஹான விஷேட குற்றப்பிரிவு அதிகாரிகளினால் வாத்துவை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் சில பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் 28 வயதுடைய புளத்கொஹுபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதுடன், மேலதிக விசாரணைகளை மிரிஹான விஷேட குற்றப்பிரிவு ஆரம்பித்துள்ளது.