வட மாகாண அமைச்சர்கள் இராஜினாமா செய்யும் அளவுக்கு, வட மாகாண முதலமைச்சரின் தேவையற்ற செயற்பாடுகள் -; ப.சத்தியலிங்கம் (காணொளி)

399 0

வவுனியா சேமமடுவில் வைத்தியசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

வவுனியா சேமமடுவில் நீண்ட கால தேவையாக காணப்பட்ட வைத்தியசாலைக்கான அடிக்கல், வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் இன்று நாட்டப்பட்டது.

இவ் வைத்தியசாலை சுமார் 9 மில்லியன் ரூபா பெறுமதியில் முதற் கட்டமாக அமைக்கப்படவுள்ளது.

சேமமடு கிராம வைத்தியசாலையாக அமைக்கப்படவுள்ள இவ் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், இப்பகுதி மக்கள் இது வரை காலம் எதிர்நோக்கி வந்த வைத்திய தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

இதன் மூலம் சுமார் 25 கிலோ மீற்றர் சென்று மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.சிவலிங்கம், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உப தலைவர் சேனாதிராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment