இலங்கையின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று இலங்கையின் அதி உயர் பௌத்த பீடங்களில் ஒன்றான மல்வத்து மஹாபீடத்தின் அனுநாயக்க திம்புல்கும்ரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பௌத்த ஆலோசக சங்கத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை அறிவித்துள்ளார்.